#MDMK தீயின் பொறி..திராவிட நெறி.. துரை வைகோ: வைரமுத்து வாழ்த்து.
Mar 21, 2024, 09:23 IST
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் வைகோவின் மகன் துரை வையாபுரி திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர் பல தலைவர்களை சந்தித்து வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்று வருகிறார்.
இன்று கவிஞர் வைரமுத்து அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,
" நாடாளுமன்றத் தேர்தலுக்கு
வாழ்த்துப்பெற வந்தார்
திருச்சி வேட்பாளர்
தம்பி துரை வையாபுரி
தீயின் பொறி
திராவிட நெறி
தேர்தலே வெறி
திருச்சியே குறி
நிறைவெற்றி காண்பார்
துரை வையாபுரி" என்று தனது வாழ்த்துக்களை கூறி பதிவிட்டுள்ளார்.