×

தினமலரின் ஒரு பதிப்பு அந்த ஊடக அறத்தைத் தாண்டியதற்காக வருந்துகிறேன்!!

 

தினமலரின் ஒரு பதிப்பு அந்த ஊடக அறத்தைத் தாண்டியதற்காக வருந்துகிறேன் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு  வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த சூழலில் பிரபல நாளிதழான தினமலரில் காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் எல்லோருக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது.வீட்டில் சாப்பிட்டு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும் அங்கும் சாப்பிடுகின்றனர். இதனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் இயற்கை உபாதைக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 


இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 
காலை உணவுத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டரசு அறம்
செய்துகொண்டிருக்கிறது.
தலைமுறைகள் இதனால்
தலைநிமிரும் என்று
நல்லவர்கள் நம்புகிறார்கள்

அதைக் கொச்சைப்படுத்துவது
அறத்தின் ஆணிவேரையே
அறுப்பதாகும்

ஊடகங்கள் பண்பாட்டின் ஊற்றுக்கண்களாகத்
திகழ வேண்டும்

எதிர்மறைக் கருத்துக்களையும்
நல்லமொழியில்
வெளியிட வேண்டும்

தினமலரின் ஒரு பதிப்பு
அந்த ஊடக  அறத்தைத்
தாண்டியதற்காக வருந்துகிறேன்

இனிவரும் காலங்களில்
அது நல்ல தமிழ்
பயன்படுத்த வேண்டும்
என்று விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.