×

ஒருத்தர் மட்டுமே ஆள்வதற்கு பிறக்கவில்லை - ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!

 

ஒருத்தர் மட்டுமே ஆள்வதற்கு பிறக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எங்களுக்கும் ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என பேசி இருந்தார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகிற 2026ம் சட்டமன்ற தேர்தலில் தன்னுடன் கூட்டணிக்கு வரும் கட்சிக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என கூறியிருந்தார். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தவெக கூட்டணிக்கு மாறும் என கூறப்பட்டது. ஆனால் விசிக தலைவர் திருமாவளவன், நாங்கள் திமுக கூட்டணியிலேயே நீடிக்கிறோம். வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியிலேஎயே விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும் என கூறினார். 

இந்த நிலையில், ஒருத்தர் மட்டுமே ஆள்வதற்கு பிறக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கனவுகள் விரைவில் நிறைவேறும் என கூறினார். எல்லாவிதமான அதிகாரமும் வருகிற சட்டமன்ற தேர்தலில் நிறைவேறும் என கூறினார். ஏற்கனவே விசிக தலைவர் திருமாவளவனும் இதே கருத்தை கூறியிருந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவும் அதே கருத்தை பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.