×

"தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க பாஜக சதி"- திருமாவளவன்

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எம்பி, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் மக்கள் நலத்திட்டங்களை முடக்க வலதுசாரி சனாதன சக்திகள் சதி செய்கின்றன. சிறு வாய்ப்பு கிடைத்தாலும் தமிழ்நாடு அரசுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் எதிராக திருப்புவதில் முனைப்பாக உள்ளனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் அரசியல் செயல் திட்டமாக உள்ளது.

கூலிக்கு கொலை செய்யும் கும்பலையும் அவர்களுக்கு அரசியல் புகலிடம் கொடுப்போரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் உள்ளவர்கள், கூலிக்கும்பல் உள்ளிட்ட அனைவரையும் கைதுசெய்து தண்டிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது. ஆருத்ரா கோல்டு மோசடியில் தொடர்புடையவர்கள் பாஜக-வில் பொறுப்பிலேயே இருக்கிறார்கள். ஆகவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை- ஆருத்ரா- பாஜக என்ற முக்கோணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

கருணாநிதி குறித்து கொச்சையாக விமர்சித்து சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க சதி நடக்கிறது. நீட் முறைகேட்டை மூடி மறைக்க பாஜக முயல்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கூட ஒரு அரசியல் செயல்த்ட்டம் இருக்க வாய்ப்புள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த உடனே பகுஜன் சமாஜ் கட்சி கேட்பதற்கு முன்பாகவே சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜக கேட்டது. தமிழ்நாட்டில் எப்படியாவது பதற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டுகிறது” என்றார்.