×

"கூட்டணி ஆதாயம் தேடும் கட்சியல்ல விசிக"- திருமாவளவன்

 

இந்தி திணிப்பு, நீட் தேர்வில் மட்டுமல்ல, மது ஒழிப்பிலும் தமிழ்நாடு முன்னோடியாக இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாளவன் எம்பி, “விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் கூட்டணி கணக்கு போடு ஆதாயம் தேடும் கட்சியல்ல. தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி பற்றி சிந்திப்பேன். தேசிய அளவில் மதுவிலக்கு வேண்டும் என்பதை விசிக வலியுறுத்துகிறது. மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் விசிக மாநாட்டில் பங்கேற்க வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். விசிக மதுவிலக்கு மாநாட்டில், கட்சி வரம்புகளை கடந்து அனைவரும் பங்கேற்க வேண்டும்"

இந்தி திணிப்பு, நீட் தேர்வில் மட்டுமல்ல, மது ஒழிப்பிலும் தமிழ்நாடு முன்னோடியாக இருக்க வேண்டும். எல்லா கட்சிகளும் மதுவிலக்கில் உடன்பாடாக இருக்கும் போது, மதுக்கடைகளை மூடுவதில் என்ன சிக்கல்? மதுக்கடைகளை மூடி, பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பீகாரில் மதுவிலக்கு அமலில் இருக்கும் போது, தமிழகத்தில் அமல்படுத்துவதில் என்ன சிக்கல்? எல்லாவற்றையும் அரசியல், கூட்டணியோடு இணைத்து பார்க்க கூடாது. இந்தி திணிப்பு, நீட் தேர்வில் மட்டுமல்ல, மது ஒழிப்பிலும் தமிழ்நாடு முன்னோடியாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.