×

திமுகவில் நாம் தலையீடு செய்து கோரிக்கைகளை எழுப்ப முடியாது- திருமாவளவன்

 

சென்னை முன்னாள் மேயர் சிவராஜின் 133வது பிறந்தநாளையொட்டி, தங்கசாலை மணிக்கூண்டு அருகில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள அன்பு இளவல் உதயநிதிக்கும், புதிதாகப் பதவியேற்கவுள்ள அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். கலைஞருக்கு மு.க.ஸ்டாலின் துணையாக இருந்து ஆட்சி நிர்வாகத்தில் பணி புரிந்தது போன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் துணையாக இருப்பார் என்று நம்புகிறேன்.

திமுகவில் நாம் தலையீடு செய்து கோரிக்கைகளை எழுப்ப முடியாது. பட்டியலினத்தவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது நாடு முழுவதும் முன்மொழியப்படுகிறது” என்றார்.