×

வேளாங்கண்ணி தேர்பவனி - காலை முதலே குவிந்த பக்தர்கள்!!

 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னையின் ஆலயம் அமைந்துள்ளது.  இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும்.  அந்த வகையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 29ஆம் தேதி   கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 இதைத்தொடர்ந்து  கடந்த  30-ஆம் தேதி முதல் இன்று  வரை பேராலயம் ,விண்மீன் ஆலயம், மாதா குளம், ஆலயமேல் கோயில், கீழ் கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. 

இந்நிலையில் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று மாலை நடைபெற உள்ளது.