விஜயலட்சுமியும், சீமானும் சமாதானமும் செய்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி!!
சீமான் மீதான புகாரை நடிகை விஜய லட்சுமி வாபஸ் பெற்றது குறித்து, வீரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 10 ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது முறையாக போலீசார் சம்மன் அனுப்பினர் .
இந்த சூழலில் யாரும் எதிர்பாக்காத வகையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்த புகார்களை திரும்ப பெற்றுள்ளார். நேற்று இரவு 12 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்ற அவர் சீமான் மீதான அனைத்து புகார்களையும் எழுத்துப்பூர்வமாக மனு கொடுத்து திரும்ப பெற்றார்.
இந்நிலையில் விஜயலட்சுமி விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர சட்ட ரீதியாகவும் நாயகர் முறையிலும் முயன்றேன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தமிழ்நாடு அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்கள். விஜயலட்சுமி சீமானும் சமாதானமும் செய்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி இந்த விவகாரம் இத்துடன் நிரந்தரமாக முடிவுக்கு வந்தது என்றார்