×

‘வாழு.. வாழ விடு’ என நடிகர் தனுஷ்க்கு விக்னேஷ் சிவன் வேண்டுகோள்

 

நடிகர் தனுஷ் மாற வேண்டும் என இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது திருமணம் தொடர்பான ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற பாடலை பயன்படுத்த அப்படத்தின் தயாரிப்பாளார் தனுஷ் அனுமதி தரவில்லை. மேலும் தனது ஆவணப்படத்தின் ட்ரெய்லரில் வெளியான 3 நொடி காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். நடிகர் தனுஷின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் நயன்தாரா, தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். 

இந்நிலையில் ஆவணப்படத்தின் ட்ரெய்லரில் வெளியான 3 நொடி காட்சியை வெளியிட்டுள்ள இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், தனுஷ் நஷ்ட ஈடு கேட்ட வீடியோவை அனைவரும் இலவசமாக பாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். அன்பை பகிருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் வாழு.. வாழ விடு... நடிகர் தனுஷ் மாற வேண்டும் என இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் நடிகருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.