×

விஜய் வீட்டில் பிச்சை எடுத்து பாத்தாச்சு.. அடுத்து போயஸ் கார்டன் போய்ட்டீங்களா சீமான்..!

 

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் தனது நேரடி அரசியல் எதிரி என திமுகவை வெளிப்படையாகவே அறிவித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருந்த போதும் கடந்த காலங்களில் விஜயை தம்பி என அழைத்து வந்த சீமான் அவரது மாநாட்டுக்குப் பிறகு மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் இடம் வேலைய ஆகவில்லை என்பதற்காக ரஜினியை சந்தித்து பிச்சை கேட்டீர்களா சீமான் என விமர்சித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் நடிகை விஜயலட்சுமி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:-

விஜய் அண்ணன் வீட்டில் பிச்சை எடுத்து எடுத்து பாத்தாச்சு.. அது ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை என அடுத்ததா போயஸ் கார்டனில் ரஜினி சார் வீட்டில் பிச்சை எடுக்க போய்ட்டீங்களா சீமான். விஜய் அண்ணன் கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு வேற எந்த வழியும் கிடைக்கலையா?

ரஜினி சார் யார் அப்படின்னு ஞாபகம் இருக்கா? அவர் அரசியலுக்கு வருகிறார் என சொன்னவுடனே உங்க வாய் தான் சொன்னுச்சு. கர்நாடகா காருரு அவரு.. மேல உப்பு மிளகாய் எல்லாம் போட்டு வறுத்து எடுத்து பாக்கணும் அப்படின்னு விருப்பப்படுகிறேன் அப்படின்னு சொன்னது மறந்து போச்சா? மேடை மேடையா கொச்சைப்படுத்தி பேசினீங்களே. அதை மறந்துட்டா அவர் வீட்டில் போயி பிச்சை போடுங்கன்னு நின்னுகிட்டு இருந்தீங்க. அசிங்கமா இல்ல.. என்ன ஒரு கேவலமான பொழப்பு மிஸ்டர் சீமான்.. உங்களுடையது விஜய் அண்ணன் கிட்ட இருந்து தப்பிக்க ரஜினி சார் காலில் போய் விழுகுறீங்க. உங்க மேல வழக்கு தொடுத்தா திமுக காலில் போய் விழுகுறீங்க.. உங்களை யாரும் நம்ப மாட்டாங்க மிஸ்டர் சீமான்..

தமிழ்நாடு மக்கள் கிட்ட சொல்றேன் யாரும் சீமான நம்பாதீங்க. நான் அவருடைய முதல் மனைவி அப்படிங்கறது உலகத்துக்கே தெரியும். என் வாழ்க்கையே சீரழிச்சு கர்நாடகாவில் அனாதையாக தூக்கிப் போட்டவர் சீமான். எனது அக்கா நடக்கக்கூட முடியாத மோசமான நிலையில் இருக்காங்க.. அந்த நிலைமையில் கூட போன வருஷம் 50000 தருகிறேன் என வீட்டுக்குள்ள வந்து வீடியோக்களை வாங்கிவிட்டு இரவும் பகலுமாக டார்ச்சர் பண்ணார்.. அதை தாங்க முடியாமல் தான் நான் கம்ப்ளைன்ட் கொடுத்தேன்..

அதை வைத்து என்னையும் திமுகவையும் மேடை மேடையாக கேவலமாக பேசி மக்களை ஏமாற்றினார் சீமான்.. யாரும் சீமானை சப்போர்ட் பண்ணாதீங்க.. தயவு செய்து மீடியா இந்த வீடியோவை டெலிகாஸ்ட் பண்ணுங்க.. நான் ஏமாந்த மாதிரி தமிழ்நாடு மக்களை சீமான் கிட்ட ஏமாற்றத்துக்கு நான் விடவே மாட்டேன். இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.