அன்பு, அமைதி, செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும்- விஜய் தீபாவளி வாழ்த்து
Oct 30, 2024, 20:29 IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தவெக தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், “தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு, அமைதி, செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும். தீப ஒளித் திருநாளைப் பாதுகாப்பாகக் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.