×

தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு மோதிரம் பரிசளித்த விஜய்!

 

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை நடத்த உறுதுணையாக இருந்த கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் மோதிரம் பரிசளித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இந்த நிலையில், விக்கிரவாண்டி மாநாட்டிற்கு நிலம் அளித்து உதவிய விவசாயிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் விருந்து வைத்தார்.  விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டிற்கு நிலம் அளித்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர்களுக்கு தவெக தலைவர் விஜய் விருந்து அளித்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை நடத்த உறுதுணையாக இருந்த கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் மோதிரம் பரிசளித்துள்ளார்.  விக்கிரவாண்டி மாநாட்டை நடத்த உறுதுணையாக இருந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விஸ்வநாதனுக்கு தங்கம் மோதிரத்தை பரிசாக அளித்தார்.