×

"விஜய் கரை சேர்கிறாரா, மூழ்கப் போகிறாரா என்று பார்க்கலாம்" - ஜெயக்குமார்

 

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்   தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் ,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நான் விஜய்யை சிறுமைப்படுத்த விரும்பவில்லை. அரசியல் என்பது பெருங்கடல். மிகப்பெரிய சமுத்திரம். அதில் நீந்தி கரை சேருபவர்களும் இருப்பார்கள். மூழ்கியும் போவார்கள். விஜய் கரைசேருவாரா மூழ்கி போவாரா என்பதை பார்க்கலாம். அதை மக்களே தீர்மானிப்பார்கள்.யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக ஓட்டுக்ககளை யாரும் கை வைக்க முடியாது  என்று தெரிவித்துள்ளார்.