அனுமதியின்றி கொடி- நடவடிக்கை பாயும் என தவெக தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை
அனுமதியின்றி கொடியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் நடிகர் விஜய் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக்கொடி அமைந்துள்ளது.
இந்நிலையில் கொடி அறிமுகப்படுத்தியதுடன் 234 தொகுதிகளிலும் இன்று கட்சி கொடியை தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் ஏற்றி வருகின்றன. பல இடங்களில் அனுமதியை மீறி கட்சி கொடியை தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் ஏற்றிவருகின்றன. அனுமதியின்றி எங்கும் கொடிக்கம்பங்கள் வைக்க கூடாது என்றும் அனுமதியின்றி கொடியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.