×

விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலகச் சாதனை விருது..!

 

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது நினைவிடத்தில் தினமும் சிறப்புப் பூசை நடைபெற்று வருகிறது.

விஜயகாந்தின் நினைவிடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக விஜயகாந்தின் நினைவுச்சின்னம் போற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக ‘லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.