×

விஜயகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

 

விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக  வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துவருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு  வருகிறார்.  இதன்காரணமாக நீண்ட நாட்களாகவே  பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துவிட்டார். தேமுதிக பொருளாளர் பிரேமலதாவே  அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களுக்கும் அவர் தலைமையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கடந்த 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.  தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும்,  செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.