×

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- பாமக, நாதகவிற்கு சின்னம் ஒதுக்கீடு

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் பத்தாம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 64 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட 29 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 35 வேட்புமனுக்கல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும். மாலை மூன்று மணியோடு அதற்கான நேரம் நிறைவடைந்த நிலையில் யாரும் வேட்புமனுவை திரும்பப்பெற முன்வராத நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிள் சின்னம் ஒதுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் வேட்பாளரின் முகவர்கள் கலந்து கொண்டுள்ளனர். திமுக வேட்பாளர் அண்ணிய சிவாவுக்கு உதயசூரியன் சின்னமும், பாமக வேட்பாளர்  சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவுக்கு ஒலிவாங்கி சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பானை சின்னத்திற்கு நான்கு பேர் போட்டியிட்ட நிலையில் குலுக்கல் நடைபெற்றது இதில் சிவசக்திவேல் என்பவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆட்டோ ரிக்‌ஷா, தீ பெட்டி, டயர், வளையல், பிரஷர் குக்கர், தர்பூசணி போன்ற சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.