×

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி- வெளியானது கருத்துக்கணிப்பு

 

மக்கள் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெரும்பான்மையான வாக்காளர்கள் திமுகவிற்கு வாக்களிக்க விருப்பம் தெரிவித்ததாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.


நடைபெற உள்ள விக்கிரபாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மக்கள் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. கருத்துக்கணிப்பு மொத்தம் 1360 பேரிடம் நடத்தப்பட்டன. இவர்கள் நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, திமுக - 56.6%, பாமக - 37.5%, நாம் தமிழர் - 4.0% வாக்குகளை பெருவர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அதிமுக வாக்குகளில் பாமகவிற்கு 52.2% வாக்குகளும், திமுகவிற்கு 37.3% வாக்குகளும், நாம் தமிழருக்கு 6.0 செல்லும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்ததில் 52.3%, வாக்காளர்கள் பாமகவிற்கு வாக்களிக்க உள்ளதாகவும், அதிமுக அதிகாரப்பூர்வமாக தேர்தலை புறக்கணிப்பதாக கூறினாலும், அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் பெரும்பான்மையானோர் பாமகவிற்கு வாக்களிக்க உள்ளதாக கூறினார். ஜாதி, மதம், ஊடகம் கட்சி ஆகியவை முக்கிய காரணங்களாக இந்த தேர்தலை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றைத் தாண்டி பணமும் மிகப்பெரிய தாக்கத்தை இந்த தேர்தலில் ஏற்படுத்துகிறது. அரசு செயல்படுத்திய திட்டங்கள் பெரிய அளவில் இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.