×

விக்கிரவாண்டி வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிவவரம்

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு   வருகிறது. 

இந்நிலையில்  திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 18,057 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் சி அன்புமணி 7,323 வாக்குகளை பெற்று பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் 1120 வாக்குகளை பெற்றுள்ளார்.