×

பரமக்குடி அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் இருந்து வெளியேறிய தொண்டர்கள்!

 

அதிமுக கள ஆய்வு நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினர்.

அதிமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உலகநாதபுரத்தில் அமைந்துள்ள தனியார் மஹாலில் ராமநாதபுரம் மாவட்ட கழகத்தின் சார்பில் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செம்மலை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மணிகண்டன், மாவட்ட செயலாளர் முனியசாமி மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.


கள ஆய்வு நிகழ்வில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், செம்மலை ஆகியோர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது அதிமுகவினர் கூட்டம் கூட்டமாக வெளியேறி சென்றனர். அதேபோல் உணவு கூடத்தில் அதிமுகவினர் சாப்பாட்டிற்கு ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்தனர்.