×

“பழனிக்கு காவடி எடுப்போம், ஆனால் அண்ணாமலைக்கு காவடி தூக்க முடியாது” - திண்டுக்கல் சீனிவாசன்

 

பழனிக்கு காவடி எடுப்போம், ஆனால் அண்ணாமலைக்கு காவடி தூக்க முடியாது என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஒட்டன்சத்திரத்தில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறும் போது,  "ஈபிஎஸ்-ஐ  முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்காததால் நாங்கள் கூட்டணியை முடித்துக் கொண்டோம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைதான் வருங்கால முதலமைச்சர் என பாஜகவினர் கூறியதை நாங்கள் ஏற்கவில்லை. பழனிக்கு காவடி தூக்குவோம் ஆனால் பாஜக தமிழக தலைவருக்கு காவடி தூக்க முடியாது.

அடுத்த முதல்வர் அவர்தான் என சொன்னால் நாங்கள் என்ன இளிச்சவாயர்களா? அமித்ஷா, நட்டாவிடம் முறையிட்ட பின் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்'' என்றார்.