தமிழ்நாட்டில் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அலகு அமைகிறது ? - ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியூ தகவல்..
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அலகை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனத் தலைவர் யங் லியூ தெரிவித்துள்ளார்.
தைவான் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், ஆப்பிள் உட்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளை ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து வழங்கி வருகிறது. அந்தவகையிக் இந்தியாவில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஆலை தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்ள்ளது. இங்கு ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாக்ஸ்கான் நிறுவனம், மின்சார வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக பேட்டரி ஆற்றல் சேமிப்பு அலகை ( Battery Energy Storage Unit ) இந்தியாவில் அமைக்க திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவுடன் ஃபாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் யங் லியூ ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் வடகால் பகுதியில் கட்டப்பட்டுள்ள மகளிர் தங்கும் குடியிருப்பை திறந்து வைக்க வந்து போது இந்த ஆலோசனை நடத்துள்ளது தெரியவந்துள்ளது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரி ஆற்றல் சேமிப்பு அலகை ( Battery Energy Storage Unit ) பாகஸ்கான் நிறுவனம் தைவானில் தொடங்கியுள்ளது. தொடர்ந்து 2வது அலகை இந்தோனேஷியாவில் தொடங்கவும் பாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.