×

“சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க மறுப்பது ஏன்?" 

 

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,  தமிழ்நாடு இணைவேந்தர் என்ற முறையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன். 102 வயதான சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம்வழங்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்; சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க மறுப்பது ஏன் என விளக்க ஆளுநர் தயாரா?

பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் அனுப்பிய தீர்மானத்தை ஆளுநர் ரவி ஏற்கவில்லை; இரண்டு முறை வேண்டுகோள் விடுத்தும் ஆளுநர் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். சமத்துவம், சமூகநீதியை பேசுபவர்களை ஆளுநருக்கு பிடிப்பதில்லை; ஆர்எஸ்எஸ்ஸில் உள்ளவர்கள் எப்போதும் சுதந்திர போராட்ட வீரர்களை மதிப்பதில்லை; ஆளுநரை போன்று சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு எதிரிகள் கிடையாது.

அமைச்சரவை முடிவை செயல்படுத்துபவர்தான் ஆளுநர்; மாநில உரிமைகள் பறிக்கும் வகையில் மாநில ஆளுநர் செயல்படுகிறார் என்றால் அது கண்டிக்கத்தக்கது. இதைவிட மோசமான ஆளுநர் இருந்ததில்லை, இவரை போன்று தவறு செய்து பொய் பேசும் ஆளுநர் யாரும் இல்லை. வேந்தர் பதவியை பயன்படுத்தி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆளுநர் நினைக்கிறார் என்றார்.