×

 ஆளுநர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தது ஏன்? அண்ணாமலை பதில் 

 

களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை  என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.   நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.  சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில் சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, “தமிழிசை சௌந்தரராஜன் 25 ஆண்டுகளாக பாஜகவில் உறுப்பினராக இருந்துள்ளார்;ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதென்பது எளிமையான முடிவு இல்லை; தமிழிசை சௌந்தரராஜன் கடினமான முடிவை எடுத்துள்ளார்; தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களிலும் ஆளுநராக பணியாற்றி நல்ல பெயரை பெற்றுள்ளார்; களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன் " என்றார்.