×

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனின் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி

 

மொரப்பூர் அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியே கொன்றது அம்பலமாகியுள்ளது.


தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கணபதி பட்டி காலனியை சேர்ந்த பழனிசாமி இவரது மகன் ராஜாராம் (வயது 31). கட்டிடத் தொழிலாளர் என இவரது மனைவி தமிழ் இலக்கியா இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்த ராஜாராம் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முந்தின இரவு வீட்டிலிருந்து கோவைக்கு வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் ராஜாராம் கூறிவிட்டுச் சென்றார். நேற்று காலை கல்லடைப்பட்டி நிழற்குடைத்தில் தலையில் ரத்த காயத்துடன் ராஜாராம் இறந்து கிடந்தார் இது குறித்து மொரப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா லீலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாராமின் உடலை கைப்பற்றி பிரக பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்ட் மகேஸ்வரன் அரூர் துணை போலீஸ் சுக்கிரன் கரிகால் பாரிசங்கர் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.  அப்போது ராஜா ராம் மனைவி தமிழ் இலக்கியா மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ராஜாராம் மனைவி தமிழ் இலக்கியாவிடம் போலீசார் விசாரத் எப்போது முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை உடனே போலீஸ் நிலைய அழைத்துச் சென்று துருவித் துருவி விசாரணை நடத்தினர் இதில் பரபரப்பான தகவல் வெளியானது.  தமிழ் இலக்கியாவுக்கு அரூர் திருவிக நகரை சேர்ந்த சரவணன் வயது 23 என்பவருக்கும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு அழகு நிலைய கடையில் வேலை கற்றுக் கொள்ள வந்த போது பழக்கம் ஏற்பட்டது.  இதனால் சரவணகுமார், ராஜாராமிடம் நட்பு ரீதியாக பழகி வந்தார். அப்போது தமிழ் இலக்கியாவுக்கும் சரவண குமாருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது 

இந்த நிலையில் தமிழ் இலக்கியாவிடம் நடத்தையில் ராஜாராமுக்கு சந்தேகம் வந்தது இதனால் கணவன் மனைவி க்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது இந்த நிலையில் கனவராஜாராம் தனது நடத்தையில் சந்தேகம் அடைந்தாலும் கள்ளக்காதலனுக்கு இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்து கட்ட தமிழ் இலக்கியாவுக்கும் சரவணகுமாருக்கும் முடிவு செய்தனர்.  இதைத் தொடர்ந்து நேற்று முந்தின இரவு ராஜாராம் சரவணகுமார் ஆகியோர் அரூரில் ஒன்றாக மது குடித்தனர். அப்போது அவருக்கு சரவணக்குமார்அளவுக்கு அதிகமாக மதுவை கொடுத்துள்ளார். இதில் அதிக போதையில் தள்ளாடியே இருந்த ராஜாராம் தன்னை வீட்டில் வண்டியில் இறக்கி விடும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் ராஜாராமை வண்டியில் உட்கார வைத்துக் கொண்டு சரவணகுமார் அதே பகுதியில் சுற்றி திரிந்தார்.  அப்போதும் அவர் கல்லடைப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தன குடிபோதையில் இருந்த ராஜாராம் திடீரென்று வாந்தி எடுத்து பஸ் நிறுத்தத்தில் மயங்கி படுத்திருந்தார் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சரவணகுமார் அருகில் இருந்த கல்லை எடுத்து ராஜா ராமின் தலையில் மீது போட்டு கொலை செய்தார். 

சம்பவம் நடக்கும் முன் வீட்டில் இருந்து வந்த ராஜா ராம் தனது மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு தான் சரவணகுமார் உடன் வெளியே செல்வதாக கூறிவிட்டு தான் வந்துள்ளார். இதனை ராஜாராமிடம் தம்பி பார்த்துள்ளார். ஆனால் தமிழ் இலக்கியாவிடம் போலீசார் விசாரிக்கும் போது முன்னுக்குப் பின் முரணான பதில் கூறியதால் தமிழ் இலக்காயா மாட்டிக் கொண்டார்.  இந்தத் தகவல் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜாராம் மனைவி தமிழ் இலக்கியாவையும் அவரது கள்ளக்காதல் சரவணகுமாரையும் கைது செய்தனர். பின்னர் கைதான இரண்டு பேரையும் கோட்டுராஜ படுத்தி தமிழ் இலக்கியவை சேலம் மகளிர் சிறையிலும் சரவணகுமாரி தர்மபுரி கிளை சிறையிலும் அடைத்தனர்.