×

டிசம்பர் 4 முதல் குளிர்கால கூட்டத்தொடர் 

 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4 முதல் 22ம் தேதி வரை  நடைபெறும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். 19 நாட்கள்  நடைபெறும்  இக்கூட்டத்தொடரில் மொத்தம் 15 அமர்வுகள் இருக்கும். தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி, பரப்புரை கூட்டத்தில் அறிவிப்பு வெளியிட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர். 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே குளிர்கால கூட்டம் தொடங்குவதால் தேர்தல் முடிவுகள் கூட்டத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஐபிசி, சிஆர்பிசி சாட்சிகள் சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஐபோன் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு மக்களவை தேர்டல் நடைபெறுவதால் ஜனவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.