×

தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு! உறவினர் போராட்டம்

 

ஈரோட்டில் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு திண்டலை அடுத்த பழனிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த  செல்வம்-வளர்மதி தம்பதியினர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 44 வயதான வளர்மதிக்கு கடந்த 23ம் தேதி காய்ச்சல் மற்றும் காது வலி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பெருந்துறை சாலையில் உள்ள சோலை பல்துறை மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் நேற்றிரவு தனது மகன் சஞ்சயுடன் வளர்மதி பேசிக்கொண்டிருந்த போது, மருத்துவர்கள் சஞ்சயை வெளியேற கூறி விட்டு வளர்மதிக்கு  சிகிச்சை அளித்துள்ளனர்.பிறகு வளர்மதி இறந்துவிட்டதாக  தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாகவே வளர்மதி உயிரிழந்திருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவிற்கு வளர்மதியை கொண்டு சென்று சிகிச்சை அளிக்காமல் சாதாரண வார்டில் வைத்து சிகிச்சை அளித்திருப்பதாகவும் குற்றம் சாட்டிய உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வளர்மதியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்கதாக உறுதி அளித்தனர். வளர்மதியின் உடலை மூவர் கொண்ட குழு வீடியோ பதிவுடன் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடத்த வேண்டும் விசாரணை நடத்தி மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர் வலியுறுத்தினர்.