×

ரொம்ப உஷார்... கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை சேமித்து வைக்கும் பெண்கள்!

 

தமிழ்நாடு அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஏற்கனவே உள்ள சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பயனாளர்கள்பயன்பெற்றுவருகின்றனர். 

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முதலில் ஒரு கோடி பேர் என இலக்கு நிர்ணயித்தாலும், அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிகளுக்குள் வரும் அனைவரையும் பயனாளர்களாக இணைக்க முடிவெடுக்கப்பட்டது. முதலில் ஒரு கோடியே 6 லட்சத்து 52ஆயிரம் பேர் மட்டுமே பயனாளர்களாக இருந்த நிலையில் அடுத்தடுத்து விண்ணப்பித்தவர்களும் பயனாளர்களாக இணைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை பெறும் 10 லட்சம் பயனாளிகளில் 60% பேர் ஒரே மாதத்தில் முழுத் தொகையையும் எடுக்காமல் வங்கிகளில் சேமித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் பணத்தின் ஒரு பகுதியைச் சேமிக்க இந்தப் பெண்கள் உரிமைத்தொகையை 8% சதவீத வட்டியுடன் கூட்டுறவு வங்கிகளில் RD மூலம் சேமித்து வருவதாகவும் கூறப்படுகிறது.