×

புதிய அபாயம்.. மின்னல் வேகத்தில் பரவும் மஞ்சள் காய்ச்சல்

 

வெளிநாடு் செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய சுகாகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில்  மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 நாட்களுக்கு பின் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள் என மத்திய சுகாகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்களில் வெளிநாடு செல்லும் பயணிகள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா? என கண்காணிக்கப்பட்டுவருகிறது.

ஆகவே இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோரும், பிற நாடுகளில் இருந்து இந்தியா வருவோரும் கட்டாயம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும், தனியார் மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்று ஏற்கப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் 3 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், வெளிநாடு செல்பவர்கள் தயங்காமல் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்தி பயனடைய முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.