×

உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு பணத்தை இழந்த இளைஞர்கள்! ஆன்லைன் செயலியால் நேர்ந்த விபரீதம்

 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்த விஜயராகவன் என்பவரது மகன் கிஷோர்(21) மற்றும் பனங்கோட்டூர் பகுதிய சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் மோகன்ராஜ் (24) ஆகியோரது செல்போனில் பலான மேட்டருக்கான புதிய செயலி ஒன்றை ஒரு கும்பல் அனுப்பியுள்ளது. அந்த செயலியில் நிறைய ஓரினச் சேர்க்கைக்கான வீடியோக்கள் வந்துள்ளது.

அதனைக்கண்ட கிஷோர் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் கிலுகிலுப்பாகி எதிர்முனையில் உள்ள அந்த செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டுள்ளனர். நீங்கள் எங்களுடன் இணைய வேண்டுமானால் இந்த செல்நம்பருக்கு ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்ப வேண்டுமென கூறியுள்ளனர். இதனை நம்பி கிஷோர் மற்றும் மோகன்ராஜ் 20 ஆயிரம் ரூபாய் மற்றும் 6 ஆயிரம் ரூபாய் என பணம் அனுப்பியுள்ளனர்.

பணத்தை பெற்றுக்கொண்ட அந்த கும்பல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நேரில் வரச்சொல்லியுள்ளனர். அவர்களை நம்பி மிகுந்த ஆர்வத்துடன் கிளுகிளுப்பாக சென்ற இருவரையும் மறைமலைநகர் ரயில்நிலையம் பின்புறத்தில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் வைத்து நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து தங்க  மோதிரம் மற்றும் பாக்கெட்டில் இருந்த பணத்தை பிடுங்கி சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட கிஷோர் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் நடந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்போன் நம்பரை வைத்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட  மறைமலைநகர் சாமியார் கேட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவரது மகன் லோகநாதன்(24) என்பவரை செங்கல்பட்டு சிறையிலும் மற்றும் 17வயது சிறுவர்கள் மூன்று பேரையும் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.