×

“ரூ.1.80 லட்சத்துக்கு வாங்கி வேஸ்ட்”- ஷோரூம் வாசலில் ஈ-ஸ்கூட்டரை எரித்த இளைஞர்

 

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனது மின்சார வாகனத்தை விற்பனை மையம் வாசலில் வைத்து எரித்த வாடிக்கையாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு தனது மின்சார வாகனம் ஏத்தர் என்ற வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வருகிறார். அது பழுதானதால் தனியார் ஏத்தர் விற்பனை மையத்தில் தனது இருசக்கர வாகனத்தை சரி செய்ய கொடுத்துள்ளார். முறையாக சரி செய்யாமல் வாகனத்தை திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.  இதனால் திரும்பச் சென்று அதே தொழில் நுட்ப கோளாறு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு முறையாக தனியார் நிறுவனம் பதில் அளிக்காத நிலையில் அதன் வாசலில் முன்பு தன்னுடைய இருசக்கர வாகனத்தை தீ வைத்துக் கொளுத்தி, நெஞ்சில் அடித்துக் கொண்டு... “யாரும் இந்த வாகனத்தை வாங்காதீர்கள்....  தான் ஏமாந்து விட்டேன்” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.