×

மனைவி வேறொருவருடன் சென்றதால் இளைஞர் தற்கொலை

 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மனைவி பிரிந்த சோகத்தில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


சென்னை புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 26). ஜீவா நகர் பகுதியில்  மேல் மாடியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் இந்த நிலையில் அவரது மனைவி இன்னொருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரது மனைவிக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டு அவரது மனைவி அவரிடம் இருந்து பிரிந்து  வேறொருவுடன் சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மகேஷ்  மனைவியை பிரிந்து சோகமான ஸ்டேட்டஸ் whatsapp ல் வைத்து மனதளவில் குழம்பி போயிருந்தார். ஒரு கட்டத்தில் சோகத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் வீட்டின் மேற்கூரையில் உள்ள இரும்பு பைப்பில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து அவருடைய நண்பர் அவருக்கு பலமுறை போன் செய்தும்  மகேஷ் ஃபோனை எடுக்காததால் அவரது வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது, அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது, இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள்  புது வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகேஷ் தற்கொலைக்கு காரணமான அவரது மனைவியையும் அவர் தொடர்புடைய இளைஞனையும் கைது செய்ய வேண்டுமென புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.