மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் இளைஞர் பலி
காரைக்குடி அருகே சூரக்குடியில் அனுமதியின்றி நடந்த வடமாடு மஞ்சு விரட்டில், காளை முட்டியதில் மாடுபிடி வீரர் கார்த்திக்(24) பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி அருகே சூரக்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவர் பங்கேற்றார். அப்போது மாடு குத்தியதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கார்த்திக் பலியானார். உரிய அனுமதியில்லாமல் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
சேலம் மாவட்டம் வரங்கம்பாடியை சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் கார்த்தி (24). லாரி டிரைவர் கார்த்திக்கிற்கு திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில், வடமாடு மஞ்சுவிரட்டில் மாடு பிடி வீரராக களமிறங்கினார். இந்நிலையில் மாடு முட்டியதில் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் தொடர்பாக குன்றக்குடி போலீஸ் விசாரணை நடத்திவருகின்றனர். மாடுபிடி வீரர் உயிரிழந்ததால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.