×

‘தேர்வு எழுதி எழுதி அசந்து போய்ட்டு’- அரசு வேலை கிடைக்காததால் தீக்குளித்து இளைஞர் பலி

 

அரக்கோணம் அருகே பனப்பாக்கம் அருந்ததி பாளையம் பகுதியில் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தீக்குளித்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் அருந்ததி பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பாலு. அவர்களுடைய மகன் பெருமாள் வயது (24). இவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய அண்ணன் மற்றும் உறவினர்கள் பல்வேறு அரசு வேலைகளில் பணியாற்றி வருகின்றனர். பெருமாள் அரசு வேலைக்கு பல்வேறு தேர்வுகளை எழுதி வந்துள்ளார். ஆனால் அதில் தோல்வியை அடைந்த நிலையில் தனியார் கம்பெனி வேலைக்கு சென்று வருகிறார். 

இந்நிலையில் உன்னுடைய அண்ணன், உறவினர்கள் அரசு வேலையில் உள்ளனர். ஆனால் நீ இப்படி தனியார் கம்பெனியில் வேலை செய்கிறாய் என வீட்டில் பெற்றோர் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த பெருமாள்  மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து தீப்பற்றி எரிந்த பெருமாளை அனைத்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு நேற்று அனுப்பி வைத்தனர் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பெருமாள் உயிரிழந்தார். 

அரசுத் துறையில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.