×

‘சாரி’ கேட்ட இர்பான்... கருணை காட்டிய அதிகாரிகள் - வெளியான முக்கிய அறிவிப்பு 

 

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிந்து யூடியூபர் இர்பான் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இர்பான் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை பரிசோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து தெரிவிப்பது சட்டப்படி குற்றம். இதை மீறி யூடியூபர் இர்பான் தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை வெளியுலகிற்கு தெரிவிக்கும் வகையிலான நிகழ்ச்சியை நடத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து யூடியூப்பில் வெளியிட்டார். இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியது. இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அவர் முன்கூட்டியே அறிந்து தெரிவித்தது தான் சர்ச்சைக்கு காரணமாகும். இதையடுத்து சுகாதாரத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையை தொடர்ந்து இர்பான் மன்னிப்பு கோரினார். மேலும் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவை டெலிட் செய்தார். இதற்கிடையே தான் மன்னிப்பு கேட்டதால் இன்னும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் யூடியூபர் இர்பான் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவத் துறையினர் தெரிவித்துள்ளனர். குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறியும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க  வெளிநாடுகளிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவத் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவத் துறையின் சார்பில் மத்திய சுகாதாரத் துறைக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. சர்ச்சை வீடியோ குறித்து மருத்துவத் துறையிடம் விளக்கம் அளித்த இர்பான், விழிப்புணர்வு காணொலி வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.