ஜெயம் ரவி படத்தில் இணைந்த 'மெலோடி மன்னன்'... புதிய கூட்டணியால் எகிறும் எதிர்பார்ப்பு !

ஜெயம் ரவி படத்தில் இணைந்த 'மெலோடி மன்னன்'... புதிய கூட்டணியால் எகிறும் எதிர்பார்ப்பு !
 
ஜெயம் ரவி படத்தில் இணைந்த 'மெலோடி மன்னன்'... புதிய கூட்டணியால் எகிறும் எதிர்பார்ப்பு !

ஜெயம் ரவி மற்றும் ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் 'பூலோகம்' இயக்குனர் கல்யாணுடன் கூட்டணி அமைத்த அவர், 'அகிலன்' படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஹார்பர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

ஜெயம் ரவி படத்தில் இணைந்த 'மெலோடி மன்னன்'... புதிய கூட்டணியால் எகிறும் எதிர்பார்ப்பு !

வடசென்னையை கலக்கிய கேங்ஸ்டர் ஒருவரின் உண்மை கதை வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இந்தப் படத்தையடுத்து ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே இது குறித்து தகவல் வெளியான நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.