ரஜினியின் அடுத்த பட டைட்டில் இதுவா ?.. தீயாய் பரவும் தகவல் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 169வது படம் உருவாகவிருக்கிறது. இந்தப் படத்தை 'பீஸ்ட்' படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சிலமாதங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ரம்யாகிருஷ்ணன், கன்னட நடிகர் சிவ் ராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் கதை எழுதும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து திரைக்கதை எழுதும் பணியை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கவனித்து வருகிறார்.
இந்தப் பணிகள் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் நிறைபெறும் என்றும், அதனால் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. அதன்படி படத்திற்கு 'ஜெயிலர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக புறப்படுகிறது. இந்தப்படம் ஜெயிலில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகியுள்ள கதை களமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.