சீனாவின் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Jan 23, 2024, 08:08 IST

சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் நேற்றிரவு 11.39 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. தெற்கு பகுதியில் ஜின்ஜியாங் மாகாணத்தில் திடீரென வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் பதறியடித்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் 27 ரயில்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதன் தாக்கமாக டெல்லியிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. டெல்லி என்சிஆர் பகுதியில் இரவு 11.45 மணி முதல் 12 மணிக்குள் நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்ததாக தெரிகிறது. இருப்பினும் அங்கு அதிர்ஷ்டவசமாக சேதம் ஏதும் ஏற்படவில்லை.