டிட்டோ ஜாக்சன் திடீர் மரணம்! யார் இவர்?

 
tito jackson

மைக்கேல் ஜாக்சனின் சகோதரரும் பிரபல இசைக் கலைஞருமான டிட்டோ ஜாக்சன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 70.

Tito Jackson death: Jackson 5 founding member and Michael Jackson's brother  dies aged 70 | The Independent

அமெரிக்க பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு திடீரென மரணமடைந்தார். இந்நிலையில் ஜாக்சன் 5 என்ற  பாப் குழுவை உருவாக்கிய சகோதரர்களில் ஒருவரான டிட்டோ ஜாக்சன் இன்று மாரடைப்பால் காலமானார். 

இதுகுறித்து டிட்டோ ஜாக்சனின் மகன்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் அன்புக்குரிய தந்தை ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேமர் டிட்டோ ஜாக்சன் இப்போது எங்களுடன் இல்லை என்பதை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். இதனால் நாங்கள் அதிர்ச்சியும், சோகமும், மனவேதனையும் அடைந்துள்ளோம். எங்கள் தந்தை அனைவரின் மீதும் அவர்களின் நலன் மீதும் அக்கறை கொண்ட  மனிதர்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஜாக்சன் 5 இல் சகோதரர்கள் ஜாக்கி, டிட்டோ, ஜெர்மைன், மார்லன் மற்றும் மைக்கேல் ஆகியோர் அடங்குவர்