×

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு

 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரப்புரை மேற்கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை  பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர். 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், அவருக்கு லேசாக காதில் காயம் ஏற்பட்டது. உடனே அவரது ஆதரவாளர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ட்ரம்ப்  சிகிச்சைக்குப் பின் நலமாக உள்ளார். ட்ரம்ப் பரப்புரையில் கலந்துகொண்ட ஒருவரே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.