×

ரஷ்யாவின் 38 மாடிக் கட்டிடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்..! வெளியான பரபரப்பு காட்சிகள்..  

 


ரஷ்யாவில் சரடோப் நகரில் உள்ள 38 அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல் போல் ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய  தாக்குதல் பார்க்கப்படுகிறது. ட்ரோன் மூலம் உக்ரைன் நடத்திய தாக்குதலில்  பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது.  2 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகனைத் தாக்குகல்களை நடத்தி வருகிறன. இந்த போரால் இரு நாடுகளில் இருந்து ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.  இருப்பினும் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்த வண்ணமே உள்ளது.  

இந்த நிலையில் தற்போது  ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருக்கிறது.  ரஷ்யாவின் சரடோப் நகரில் அமைந்துள்ள 38 அடுக்கு மாடிக் கட்டிடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருக்கிறது.  அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் பாணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அந்தக் கட்டிடம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2023 ஆம் ஆண்டின் இறுதியில், அதாவது போர் தொடங்கிய ஓராண்டுக்குள்ளாக ரஷ்யப் படைகள் உக்ரைனுக்கு எதிராக சுமார் 7,400 ஏவுகணைகள் மற்றும் 3,900 ஷாஹெட் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரேனிய இராணுவ அதிகாரிகளின் கூறுகின்றனர்.