உலகம் முழுவதும் முடங்கியது எக்ஸ் தளம்- பயனர்கள் தவிப்பு

 
twitter

பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளம் திடீரென முடங்கியதால் அதன் பயனர்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Twitter 'X'-pires: New logo takes over Twitter page and brand - Twitter 'X'  pires: New logo takes over Twitter page and brand BusinessToday


ட்விட்டர் என்ற பெயரில் இயங்கி வந்த சமூக வலைத்தளத்தை முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் 2023ஆண் ஆண்டில் வாங்கினார். பின்னர் அதன் பெயர் எக்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளம் திடீரென முடங்கியதால் அதன் பயனர்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வெப்சைட் மட்டுமல்லாது மொபைல் ஆப் வெர்சனிலும் எக்ஸ் வலைத்தளம் பலரால் பயன்படுத்த முடியாமல் முடங்கியுள்ளது. இன்றைய தினம் ஏற்கனவே பிற்பகல் 3.30 மணி அளவில் முடக்கம் கண்டதாக தகவல் வெளியானது. அந்த சமயத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளை சேர்ந்த யூசர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அது சீரானதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் மாலை 7 மணிக்கு மேல் இரண்டாவது முறையாக எக்ஸ் தளம் முடங்கியது.  இதனால் இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் பாதித்துள்ளனர்.

2025ஆம் ஆண்டில் எக்ஸ் வலைத்தளம் இத்தகைய முடக்கத்தை கண்டது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எக்ஸ் வலைத்தளம் உலகம் முழுவதும் முடங்கியது குறிப்பிடதக்கது.