“ஏப்ரல் 29 வரை கருத்துக்கணிப்பு வெளியிட கூடாது” – தடா போட்ட தேர்தல் ஆணையம்!

இந்தியாவில் தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் களம் நினைத்ததை விட உக்கிரமாக இருக்கிறது. யார் ஜெயிப்பார், யார் முதல்வர் ஆவார் போன்ற கருத்துத்துக்கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாக இருந்தால் கொண்டாடுகிறார்கள், இல்லையென்றால் கருத்துக்கணிப்பை பயங்கரமாக எதிர்க்கின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக கூட்டணி அச்சத்தில் கருத்துக்கணிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இச்சூழலில் கருத்துக்கணிப்பு வெளியிடக் கூடாது என இந்திய
 

“ஏப்ரல் 29 வரை கருத்துக்கணிப்பு வெளியிட கூடாது” – தடா போட்ட தேர்தல் ஆணையம்!

இந்தியாவில் தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் களம் நினைத்ததை விட உக்கிரமாக இருக்கிறது. யார் ஜெயிப்பார், யார் முதல்வர் ஆவார் போன்ற கருத்துத்துக்கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாக இருந்தால் கொண்டாடுகிறார்கள், இல்லையென்றால் கருத்துக்கணிப்பை பயங்கரமாக எதிர்க்கின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக கூட்டணி அச்சத்தில் கருத்துக்கணிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

“ஏப்ரல் 29 வரை கருத்துக்கணிப்பு வெளியிட கூடாது” – தடா போட்ட தேர்தல் ஆணையம்!

இச்சூழலில் கருத்துக்கணிப்பு வெளியிடக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி மாநிலங்களிலும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் மாரச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தவோ, அதன் முடிவுகளை அச்சு மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்கள் அல்லது வேறு விதத்தில் வெளியிட தடை விதிக்கப்படுகிறது. தேர்தல் முடியும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக கருத்துக்கணிப்பு உட்பட தேர்தல் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் எலக்ட்ரானிக் ஊடகங்களில் வெளியிட தடைவிதிக்கப்படுகிறது.