பிரச்சாரத்தில் பண பட்டுவாடா… அமைச்சர் ஆதரவாளர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு!

தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் வருமான வரித் துறை சோதனைகளும் அரசியல் கட்சி தலைவர்களையும் நிர்வாகிகளையும் நெருக்கிக் கொண்டிருக்கின்றன. நேற்று பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரத்தில் திமுக, மதிமுக பிரமுகர்களின் வீடுகள், நிறுவனங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொருளாளர் வீட்டிலும், நிறுவனங்களிலும் இரண்டு நாளாகச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத சுமார் 8 கோடி ரூபாய் பணம் சிக்கியது. பாஜக போட்டியிடும் தொகுதிகளில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகளில்
 

பிரச்சாரத்தில் பண பட்டுவாடா… அமைச்சர் ஆதரவாளர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு!

தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் வருமான வரித் துறை சோதனைகளும் அரசியல் கட்சி தலைவர்களையும் நிர்வாகிகளையும் நெருக்கிக் கொண்டிருக்கின்றன. நேற்று பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரத்தில் திமுக, மதிமுக பிரமுகர்களின் வீடுகள், நிறுவனங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொருளாளர் வீட்டிலும், நிறுவனங்களிலும் இரண்டு நாளாகச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பிரச்சாரத்தில் பண பட்டுவாடா… அமைச்சர் ஆதரவாளர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு!

இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத சுமார் 8 கோடி ரூபாய் பணம் சிக்கியது. பாஜக போட்டியிடும் தொகுதிகளில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகளில் ஐடி ரெய்டு நடத்துவது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டிவந்தனர். அமைச்சர் எம்சி சம்பத் பிரசாரத்தின் போது பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று கடலூரில் அமைச்சர் எம்சி சம்பத்தின் ஆதரவாளர்களாக அறியப்படும் 8 பேரின் வீடுகளில் இன்று வருமான வரித் துறையினர் சோதனையில் இறங்கியுள்ளனர்.

பிரச்சாரத்தில் பண பட்டுவாடா… அமைச்சர் ஆதரவாளர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு!

அமைச்சரின் ஆதரவாளர்களான சூரப்பன்நாயக்கன்சாவடியிலுள்ள மதியழகன், பாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், மகேஷ்வரி உள்ளிட்ட 8 பேருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இச்சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பாஜக பொதுச்செயலாளர் சிடி ரவி, கருப்பு பணம் வைத்திருப்பதால் ரெய்டு நடக்கிறது என்று சொல்லிமுடித்து விட்டார்.