“மொட்ட மாடி கல்பனா”… வார்த்தைய விட்ட விஜய பிரபாகரன்; அப்படியே ஆடிப்போன டிடிவி!

2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை தாங்கிய தேமுதிக படுதோல்வியைச் சந்தித்தது. விஜயகாந்தின் உடல்நலக் குறைவு காரணமாக கட்சியும் பொழிவிழந்து போனது. கொஞ்ச நாள் அமைதியாக இருந்த பிரேமலதா திமுக பக்கம் துண்டை விரிக்க துரைமுருகன் கேட் போட்டு அனுப்பிவிட்டார். வேறு வழியில்லாமல் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்தார். மக்களவை தேர்தலையும் தேமுதிக சந்தித்து ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. 2016இல் பெருமளவு சரிந்த வாக்கு வாங்கி 2019இல் அதலபாதாளத்திற்குச் சென்றது. தேமுதிகவின் மவுசு குறைவதை உணர்ந்துகொண்ட அதிமுக
 

“மொட்ட மாடி கல்பனா”… வார்த்தைய விட்ட விஜய பிரபாகரன்; அப்படியே ஆடிப்போன டிடிவி!

2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை தாங்கிய தேமுதிக படுதோல்வியைச் சந்தித்தது. விஜயகாந்தின் உடல்நலக் குறைவு காரணமாக கட்சியும் பொழிவிழந்து போனது. கொஞ்ச நாள் அமைதியாக இருந்த பிரேமலதா திமுக பக்கம் துண்டை விரிக்க துரைமுருகன் கேட் போட்டு அனுப்பிவிட்டார். வேறு வழியில்லாமல் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்தார். மக்களவை தேர்தலையும் தேமுதிக சந்தித்து ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. 2016இல் பெருமளவு சரிந்த வாக்கு வாங்கி 2019இல் அதலபாதாளத்திற்குச் சென்றது.

“மொட்ட மாடி கல்பனா”… வார்த்தைய விட்ட விஜய பிரபாகரன்; அப்படியே ஆடிப்போன டிடிவி!

தேமுதிகவின் மவுசு குறைவதை உணர்ந்துகொண்ட அதிமுக தலைமை கடைசி வரை கூட்டணி பேச்சுக்கு அழைக்கவில்லை. தங்களை விட குறைந்த வாக்கு வங்கி வைத்துள்ள பாஜகவிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திவிட்டு தேமுதிகவை உதாசீனப்படுத்தியதாக வெளிப்படையாகவே கட்சி நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர். பிரேமலதா கூட்டணிக்கு அழைக்குமாறு மனம் விட்டு கேட்டுவிட்டார். இறுதியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்த அதிமுக 15க்கு மேல் தர முடியாது என்று நிற்க பாஜக, பாமகவை விட அதிக சீட் கேட்டு அடம்பிடித்தது. கொடுக்கமுடியாது என அதிமுக சொல்ல அத்துக்கொண்டு போய்விட்டார் பிரேமலதா.

உடனே மக்கள் நீதி மய்யம் அழைக்க நாங்கள் சீனியர் உங்களுடன் வச்சிக்க மாட்டோம் என அரசியல் சீனியாரிட்டி தீண்டாமை பார்த்தது. தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக இறுதியில் டிடிவி தினகரனிடம் தஞ்சமடைந்தது. அவருடனும் பிடிவாதம் பிடித்து கட்டக்கடைசியில் தான் 60 தொகுதிகள் என உடன்பாடு எட்டப்பட்டது. தவிர தேர்தல் செலவுக்கும் பொட்டி கைமாறியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கேப்டன் ஆக்டிவாக இல்லை என்பதால் பிரேமலதா துணை முதல்வர் போஸ்டிங்குக்கும் ஒப்புக்கொண்டாராம்.

விஷயம் இப்படியிருக்க விஜயகாந்த் மகனோ டிடிவி தினகரனே ஆடிப்போகும் அளவிற்கு வார்த்தைகளை விட்டுள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், “தேமுதிக இன்னமும் தமிழ்நாட்டில் வலுவாகவே இருக்கிறது. வருகின்ற தேர்தலில் எங்கள் வலிமை என்ன என்பதை நிச்சயம் நிரூபிப்போம். நாங்கள் யாரிடமும் கூட்டணிக்காக போய் கைகட்டி நிற்கவில்லை. அமமுக கூட்டணியில் தேமுதிக இல்லை. எங்கள் கூட்டணியில் தான் தினகரன் இருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.

விஜயபிரபாகரன் இப்படி பேசுவது முதல் முறையல்ல. அதிமுகவை விட்டு வெளியேறியதுமே அக்கட்சியையும் தலைவர்களையும் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல பேச விஜயபிரபாகரனிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அப்போதே அதிமுகவினர் முன்மொழிந்திருந்தனர். தற்போது அமமுகவினரும் வழிமொழிகிறார்கள்.

இதுபோன்று பக்குவமற்று பேசினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார்களாம். “மொட்ட மாடி கல்பனா அந்த கூட்டணியே உன்னுது இல்லையாமே… நீயே அங்க வாடகைக்கு தான் இருக்கியாமே” என்று டிடிவி தினகரனே நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர். இதனால் கலக்கத்தில் இருக்கிறாராம் கூட்டணி தலைவர்.