திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெரும்! இது உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கணிப்பு

ஸ்டாலினை போலவே தன் தொகுதியில் மட்டுமல்லாது அனைத்து தொகுதிகளுக்கும் சென்று திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே கொரோனா பரவலுக்கு மத்தியில் நவம்பர் மாதமே களத்தில் இறங்கி சூறாவளியாய் பிரச்சாரம் செய்துவருகிறார் உதயநிதி. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட, ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மதிவேந்தனை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். ராசிபுரம்
 

திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெரும்! இது உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கணிப்பு

ஸ்டாலினை போலவே தன் தொகுதியில் மட்டுமல்லாது அனைத்து தொகுதிகளுக்கும் சென்று திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே கொரோனா பரவலுக்கு மத்தியில் நவம்பர் மாதமே களத்தில் இறங்கி சூறாவளியாய் பிரச்சாரம் செய்துவருகிறார் உதயநிதி.

திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெரும்! இது உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கணிப்பு

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட, ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மதிவேந்தனை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். ராசிபுரம் புதிய பேருந்துநிலையத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மோடி தலைமையிலான பாஜக அரசு ரூ.15 லட்சம் கொடுப்பதாக கூறியது. அக்கவுண்ட்டில் செலுத்தப்படும் எனக்கூறி மக்களை ஏமாற்றியது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கூறியது. ஆனால் அதனையும் செய்யவில்லை. அங்கு கட்ட வைத்திருந்த ஒத்த செங்கலையும் நான் எடுத்துட்டு வந்துவிட்டேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மோடியிடம் தமிழகத்தில் உரிமைகளை அடமானம் வைத்துவிட்டார். வரும் தேர்தலில் திமுக நிச்சயம் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறும்” என தெரிவித்தார்.