• April
    24
    Wednesday

Main Area

Main



அண்ணா பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு: 37 பேர் பணி நீக்கம்

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்
Loading...

2017-ஆம் ஆண்டுக்கான அண்ணா பல்கலைக்கழக தேர்வில் நடந்த மதிப்பெண் முறைகேடு தொடர்பாக 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக தேர்வில் 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தோல்வியடைந்தனர். மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களில், 70 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 12 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றனர். மறுமதிப்பெண் வழங்குவதில் ஊழல் நடந்துள்ளது என மீனா என்ற மாணவி அளித்த புகாரின் பேரில், கையூட்டு தடுப்புப் பிரிவு அண்ணா பல்கலைக்கழக மதிப்பெண் ஊழல் குறித்து கண்டறிந்தது.

மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் வழங்க ஒரு விடைத்தாளுக்கு 10,000 ரூபாய் வரை வசூலித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் மறுமதிப்பீடு செய்ய அதிகாரப்பூர்வமாய் பெற்ற பணம் மட்டுமே 200 கோடி ரூபாய். மாணவி மீனா தனியாகவே பெரும்பான்மையான ஆதாராங்களை திரட்டி கொடுத்திருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளாக மதிப்பெண் ஊழல் மிகவும் வெளிப்படையாகவே நடந்து வந்தது இதன்மூலம் தெரிய வந்தது.  கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ள இந்த வழக்கில், இதுதொடர்பாக தேர்வு பணியில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர்கள் 37 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என தெரிகிறது.

2018 TopTamilNews. All rights reserved.