• July
    20
    Saturday

Main Area

Main



பாலாவின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்?

இயக்குநர் பாலா
இயக்குநர் பாலா
Loading...

சென்னை: இயக்குநர் பாலா இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஆர்யா மற்றும் அதர்வா இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் இயக்குநர் பாலா ரீமேக் செய்தார். இதில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார்.  அப்படம் முழுமையாக முடிந்துவிட்டாலும், தயாரிப்பாளருக்குப் படம் பிடிக்கவில்லை என்பதால் படம் கைவிடப்பட்டது.

வர்மா படம் கைவிடப்பட்டது குறித்து பாலா விடுத்திருந்த அறிக்கையில், 'படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்திலிருந்து விலகிக்கொள்வது என்பது நானாக எடுத்த முடிவு. துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை' என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், பாலாவின் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. படப்பிடிப்புகாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் முறை குறித்தெல்லாம் பல ஊர்களுக்குச் சென்று நேரில் பார்வையிட்டார் பாலா. 

arya

தற்போது அக்கதை முழுமையாக முடிந்துள்ள நிலையில்,அப்படத்தில் நடிக்க ஆர்யா மற்றும் அதர்வா இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்ப்பாக்கப்படுகிறது. 

முன்னதாக பாலா இயக்கத்தில் 'நான் கடவுள்', 'அவன் இவன்' படங்களில் ஆர்யாவும், 'பரதேசி' படத்தில் அதர்வாவும் நடித்திருந்தது  குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: ‘99’ ஆக மாறிய ராம்-ஜானு: சகட்டு மேனிக்கு கலாய்க்கும் நெட்டிசன்கள்!

2018 TopTamilNews. All rights reserved.