• May
    23
    Thursday

Main Area

Main



சென்னையில் நடைபெற்ற ஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு: பிரபலங்கள் பங்கேற்பு ; புகைப்படங்கள் உள்ளே!

நடிகர் ஆர்யா- சாயிஷா
நடிகர் ஆர்யா- சாயிஷா
Loading...

சென்னை: நடிகர் ஆர்யா- சாயிஷா திருமணத்தையடுத்து  திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.

நடிகர் ஆர்யா - சாயிஷா கஜினிகாந்த் படத்தில் நடித்த போது சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகக் கடந்த காதலர் தினத்தன்று அறிவித்தனர். இதை தொடர்ந்து இவர்களின் திருமண ஏற்பாடு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

arya

இதையடுத்து கடந்த 9ஆம் தேதி சங்கீத் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் முக்கிய பாலிவுட் பிரபலங்கள் சஞ்சய் தத், ஆதித்யா பஞ்சோளி, சப்யஸாச்சி ஸ்தபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் தமிழ், தெலுங்கு மலையாள நடிகர்,நடிகைகள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து  மறுநாள் (மார்ச் 10 ம் தேதி) ஆர்யா - சாயிஷா இருவருக்கும் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இதில் சூர்யா, கார்த்தி, ஷாம், இயக்குநர் ஏ.எல். விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

arya ttn


இந்நிலையில், ஆர்யா -  சாயிஷா இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி  சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஆர்யா வெள்ளை நிற பிளேசர் ஆடையும், சாயிஷா சிவப்பு சேலை அணிந்திருந்தார்.  பாந்தினி என்ற சொல்லக்கூடிய அந்த சேலையில் தங்க நிறத்தில் அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

arya reception ttn

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர் பரத், இயக்குநர் ஏ.எல்.விஜய், நடன இயக்குநர்  ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தற்போது ஆர்யா மற்றும் சாயிஷா திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
 

2018 TopTamilNews. All rights reserved.