தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

 
test

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு  10 வகுப்பு பொது தேர்வு நடைபெறுகிறது

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. நடப்பாண்டில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் தாமதமாக துவங்கின. இதனால், மார்ச் மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்வு, நடப்பாண்டில் இன்று தொடங்கி வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மாநிலம் முழுவதிலும், 3 ஆயிரத்து 888 தேர்வு மையங்களில் 9 லட்சத்து 38 ஆயிரத்து 337 பேர் தேர்வு எழுதுகின்றனர். 30 ஆயிரத்து 765 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதவுள்ளனர்.  அதேநேரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை புதுச்சேரியில் 16 ஆயிரத்து 802 பேர்  எழுதுகின்றனர். 

exam

வினாத்தாள் கசிவதை தடுக்க கட்டுக்காப்பு மையங்களில் வைக்கப்பட்டு, தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் என கூறப்பட்டுள்ளது. முறைகேடுகள் நடப்பதை தடுப்பதற்காக 3 ஆயிரத்து 50 பறக்கும் படை ஆசிரியர்களும், ஆயிரத்து 241 ஸ்டாண்டிங் ஸ்குவார்டு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் உள்ளிட்ட மொழித்தாள் தேர்வு நடைபெற்று வருகிறது.